onefetna.com

Test


Meet ‘the United For FeTNA’ Team

சொல்லில் நேர்மை, செயலில் உறுதி, தலைமையில் திடம்!

Our Leadership Slate

Vijay Manivel

For President

பேரவைத் துணைத்தலைவராகப் பணியாற்றி வருகின்றார். மிசௌரி தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும், பேரவையின் பல்வேறு குழுக்களின் தலைவராகவும், பேரவை விழாக்களின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியாற்றி வருபவர்.

Ezhilan Ramarajan

For Vice President

பேரவை துணைப்பொருளாளராகப் பணியாற்றி வருகின்றார். அட்லாண்டா தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும், பேரவையின் பல்வேறு குழுக்களின் தலைவராகவும், நிதிதிரட்டுவதில் முன்னணிப் பொறுப்பாளராக எனப் பல பணிகளை கடந்த 25 ஆண்டுகளாக மேற்கொண்டு செய்து வருபவர்.

Dr. Kabilan Velliya

For Secretary

நியூசெர்சி தமிழ்ப்பேரவை. பேரவையின் தமிழ் அறிவியல் குழு, இணை அரங்கம் ஒருங்கிணைப்பாளர் குழு உள்ளிட்டவற்றில் தொடர்ந்து பணியாற்றி வருபவர். நியூசெர்சி தமிழ்ப்பேரவை, தமிழ்ப்பள்ளியின் நிறுவனர்களுள் ஒருவராகவும் தலைவராகவும் பணியாற்றியவர்.

Jansirani Prabakaran

For Joint Secretary

பேரவையின் இயக்குநராகப் பணியாற்றி வருகின்றார். விஸ்கான்சின் தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் இருந்து அனுபவம் படைத்தவர். 25 ஆண்டுகாலமாகப் பேரவைக்காகப் பல்வேறு பொறுப்புகளில் விழாமலர் ஆசிரியர், இணை ஒருங்கிணைப்பாளர் எனப் பணியாற்றியவர்.

Vallikkannan Maruthappan

For Treasurer

பேரவையில் பல சீர்திருத்தங்களைச் செய்து வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களுக்குள் தொடர்பு, உறுப்பினர்களின் நிச்சயமற்ற சூழ்நிலைகளில் உதவி, நிகழ்வு மேலாண்மை போன்றவற்றுக்கு உதவியுள்ளார். கனடியத் தமிழ்ச்சங்கத்தின் மேனாள் தலைவர்.

Suba Sundaralingam

For Joint Treasurer

பேரவையின் ஈழத்தமிழர்நலன், ஈழப்பணிகள், தமிழர்தொடர்புக் குழுக்களில் பணியாற்றி வருபவர். அமெரிக்காவில் தமிழர்நலன், தமிழ்க்கல்வி, கலை இலக்கியம் தொடர்பான பணிகளுக்கு ஒருங்கிணைப்பாளராகவும், போஸ்டன் தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியவர்.

கொள்கை மற்றும் தொலைநோக்கு

தொலைநோக்கு

அடுத்த பத்து ஆண்டுகளுக்கான பார்வையுடன் செயற்பட்டுப் பங்களிப்பைத் தொடர்ந்து மேற்கொள்வதும் விழிப்புணர்வை ஊட்டுவதும். அமெரிக்க விழுமியங்களைக் கொண்ட வழிகாட்டு ஆவணங்களைக் கட்டமைப்பது.

வெளிப்படை

மேற்கொள்ளும் பணிகளின் நிலைப்பாடு, கணக்குவழக்குகள், உறுப்பினர் அமைப்புகளின் தொடர்பு முதலானவற்றை வெளிப்படையாக வைத்துக் கொள்தல். இணையப் பக்கத்தைத் திறம்படப் பராமரிப்பதன் வழி அதனைச் சாத்தியமாக்குவது.

அறம்

தனிமனிதர்களின் விருப்பு வெறுப்புக்கு இடங்கொடாமல் நெறிகளுக்கொப்பப் பணிகள் இடம் பெறுதலை உறுதிப்படுத்துதல். சாதி, சமய, இடம், பால் முதலான பேதங்களோ பக்கச்சாய்வோயின்றி ஒவ்வொரு செயலும் இடம் பெறும் வகையிலான நிர்வாகத்தினைக் கட்டமைப்பது.

மாற்றத்திற்கான ஒப்பீடுகள்

இன்று

  • வெளிப்படைத்தன்மைப் போதாமை.
  • சட்டக்கோப்பில் மேம்பாடின்மை.
  • வருமானவரித் தாக்கலில் தொடர்தாமதம்.
  • உறுப்புச் சங்கங்களுடனான உறவில் பாகுபாடு.
  • கணக்கு வழக்குகளில் முரண்பாடு.

நாளை

  • செயற்குழு, பொதுக்குழுக்கூட்ட முடிவுகள் உடனுக்குடன் பொதுவெளியில் பகிரப்படும்.
  • சட்டக்கோப்பில் காலத்துக்குத் தேவையான மேம்பாடு கொள்ளப்படும்.
  • வருமானவரித் தாக்கல் ஏப்ரல் மாதத்திற்குள் செய்யப்படும்.
  • பேராளர்களுக்குக் கமிட்டிகளில் தகுந்த முன்னுரிமை வழங்கப்படும்.
  • கணக்குகள் உரிமம் பெற்றவர்கொண்டு தணிக்கை செய்யப்படும்.

© 2026 United For FeTNA. Developed via standard CSS frameworks.